🟡. *சித் அம்பர சிதம்பர *ஆகாயத் தல ஆகாய லிங்கப் பரம்பொருள் *எல்லாம் கடந்த மெய்க் கடவுள் நடராஜரே அம்மை இறைவி, நடராஜரே அப்பன் இறைவன் , நடராஜரே இருபாலீசர் அம்மை யப்பன்.*
என்பதை
🟠 *அம்மை குலாத் தில்லை ஆண்டானை* (திருவாசகம்)
🛑 *பெண்ணுமாய் ஆணும் ஆகிப்* போதியா நிற்கும் *தில்லைப் பொது நடம்* (சேக்கிழார்)
🔵 *பெண் ஆண் அலி* என்று பேச்சுக் கடந்த *பெரு வெளியை* (சங்கப் புலவர் பரணர்)
✡️ *இரண்டு உருவாய் ஈரணி பெற்ற எழில் தகையன்* (பதிற்றுப் பத்து) 🟡 *பெண் உரு ஒரு திறன் ஆகின்ற அவ்வுரு* (புறநானூறு) ☸️ *பல் உருவம் பெயர்த்து நீ கொடுகொட்டி ஆடுங்கால்* (கலித் தொகை) என்று காலந்தோறும் இலக்கியங்கள் போற்றுகின்றன. *சித் எனப்படும் சிவம் அம்பரமாக ஆகாயமாக பெரு வெளியாக இருப்பதால்* சிதம்பரம், சித் சபை என்று பெயர். *சித்சபா என்ற சமஸ்கிருதச் சொல் தமிழ் இலக்கணப்படி *சிற்சபை என்று ஆனது. இது தூய தமிழில் சிற்றம்பலம்* ஆயிற்று. ஆதலால் *தான் ஒருவனே* *இறைவனாகவும் இறைவியாகவும் அலிப்பெருமானாகவும் உள்ள தாயுமானவன் தோடு உடைய செவியன் நடராஜரோடு* வைக்கப்படும் *சிவகாமி* என்ற மனிதப் பெண் உருவம் *தனிப் பெரும் காம தகனத் தூய *கடவுளை இழிவுபடுத்தும்* பிற்காலக் *காமுக நாஸ்திகர்களின் தீய கற்பனையே* . *சிவ பூஜையும் தவமும் செய்தால் மட்டுமே அம்பாளுக்கு நடராஜ தரிசனம் கிடைக்கும்.* பிறவி நீங்கிய *சிவ கணம் மட்டுமே ஈசனுடன்* இருக்க முடியும். சர்வ வியாபி *நிர்மலக் கடவுளோடு* பிறவியுள்ள *மும்மல எந்த சாமியும் எந்த அம்மனும் எந்த மனித ஜென்மமும் இருக்க முடியாது*. கோயிலுக்குச் சென்று அங்கு நடக்கும் *சிவ அபச்சார அபிஷேகத்தைப் பார்த்துப் பாவ மூட்டையைச் சுமந்து வராமல்* *வீட்டிலே நடராஜரை வைத்து நித்ய பூஜை செய்தால் பல மடங்கு புண்ணியம் உண்டாகும்*. செய்வது *சிவ நிந்தனை மகா பாவம் அபச்சாரம் என்று தெரிந்த பின்னும் திருந்தாதவர்கள்* இந்து விரோதிகளே. *மாணிக்க வாசகரையும் சேக்கிழாரையும், அவர்களது வாசகங்களை எழுதியும் சொல் கொடுத்தும் அருளிய நடராஜரையும் மறுத்து இழிவுபடுத்தும் சிவதுரோகிகளே* .*🟡 பேச்சுக் கடந்த பெ ரு வெளி* (பரணர்) ✡️ *தில்லைத் திருச் சிற்றம்பலவ போற்றி உம்பரா போற்றி என்னை ஆளுடை ஒருவ போற்றி* (திருவாசகம்) என தெய்வத் தமிழ்ச் சங்கம் சிறப்புற்று இருந்த *மாணிக்க வாசகர் காலத்தில் நடராசரை அடுத்து இருந்த ஆகாய லிங்க உம்பரான் மூலஸ்தானம்* பின்னர் கோவிந்த ராஜப் பெருமாள் சந்நிதி ஆனது. 💥 ஒன்று காட்ட மற்று ஆங்கு *அது காட்டிடு என்று தில்லை *அம்பலம் முன்றில் வரம் கிடந்தான்* அம் மாயவனே (திருக் கோவையார்) என நடராசருக்கு எதிரே காளை வாகனம் போல் கிடந்த கோலத்தில் ஈசனை நோக்கித் திருக் காட்சி வேண்டித் தவ நிலையில் இருந்த விஷ்ணுவிற்குத் தனிச் சந்நிதியாக மாற்றப்பட்டது. ஆகாய லிங்கம் மாடிப் பிரகாரத்தில் பக்தருக்கு அனுமதி இல்லாமல் ஒப்புக்கு வைக்கப்பட்டுள்ளது . வரகுண பாண்டியன் கட்டிய *சுந்தரக் கூத்தன் வெள்ளி யம்பல வாணர் கல் மேனி நடராசர் சந்நிதி பிற்காலத்தில் சிவகாமி என்ற கற்பனைப் பெண் சந்நிதி ஆனது*. பின்னர் கோயில் முழுவதும் மனம் போனபடி ஆண் பெண் ஜீவ ராசி சந்நிதிகள் கட்டப்பட்டு எல்லாம் கடந்த அற்புதக் கடவுளின் திருக்கோயில் அஞ்ஞானிகளால் நாசம் ஆக்கப்படுகிறது. கோயில் நிர்வாகம் கொடுக்கும் படங்களிலும் படக் கடை மற்றும் எங்கும் *தலப் பரம் பொருள் ஆகாய லிங்கம் இருக்காது*. ஆதி மூல லிங்கமும் இருக்காது. சிவப்பிரியா
No comments:
Post a Comment